'பதினெட்டாவது படி' முதல் பக்கத்திலிருந்தே வாசகரை ‘படி..படி' என்று கீழே வைக்கவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடும் சுவையான நாவலாகும். முடிவு எதிர்பாராத அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது இதன் ஒரு சிறப்பு. திகைக்க வைக்கும் இதன் முடிவு வாசகர்களின் பாராட்டைப் பெறும் என்பதில் ஐயம் இல்லை .
'பதினெட்டு படி' ஒரு வாழ்க்கைத் தத்துவம். ஆயுளின் முதல் பதினெட்டு ஆண்டுகளைக் குறிப்பிடும் இத்தத்துவம் இரண்டாண்டு வளர்ந்த குழந்தை பெறவுள்ள பதினாறு பேறு களைச் சுட்டிக்காட்டுவதை நூலாசிரியர் கதை மூலம் சலிப்புத் தட்டாமல் விளக்குகிறார்.
Be the first to rate this book.