உலகின் முக்கியமான திரைப்பட இயக்குனர்களில் ஒருவரெனக் கருதப்படும் சத்யஜித்ரேயின் முதல் மற்றும் கடைசித் திரைக்கதைகள், சில அரிய கட்டுரைகள், நேர்காணல்கள் உள்ளடக்கியது இந்நூல். இவ்விரண்டு திரைக்கதைகளையும் ஒருசேரப் படிக்கும்போது ரேயின் பரிணாமம் நமக்குத் தெளிவாகப் புலனாகிறது. யதார்த்தமான காட்சிகளுடன் கதை சொல்லத் துவங்கிய ரே தனது இறுதிக்காலத்தில் எளிய உரையாடல்களைக்கூட அர்த்தம் பொதிந்ததாகக் கையாள்கிறார். மனித உறவுகள் மீது அவருக்கிருந்த நம்பிக்கையையும், அதனுள்ளிருக்கும் அவநம்பிக்கையையும் ஒரு மேதைக்கேயுரிய ஆளுமையுடன் வெளிப்படுத்துகிறார். அவரது படங்களைக் கூர்ந்து வாசிப்பதற்கும், நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்குமான சாத்தியங்களை நமக்குத் தருகிறது இந்நூல்.
Be the first to rate this book.