பசு.தனபாலன் சிறுகதைகள்
-பசு. தனபாலன்
என் பதினைந்தாவது வயதிலிருந்தே பல முன்னணி பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதி அனுப்பத் தொடங்கி இருந்தாலும் என்னுடைய முப்பதாவது வயதில்தான் என் முதல் சிறுகதை 'மூக்குத்தி' (1986) முன்னணி இதழான 'சாவி' வார இதழில் பிரசுரமாயிற்று! எழுத்துலக ஜாம்பவான் அமரர் சாவி தன் கைப்பட கடிதம் எழுதி என்னை பாராட்டினார்! தொடர்ந்து 'குமுதம்', 'கல்கி, ஆனந்த விகடன்' என்று பல இதழ்களில் என் சிறுகதைகள் பிரசுரமாகின. சமூகம், காதல், அரசியல், சயின்ஸ் பிக்சன். மனோதத்துவம் என்று சகல திசைகளிலும் என் கற்பனை பயணித்தது. எண்ணிக்கையில் குறைவான கதைகளே என்றாலும் மனதுக்கு நிறைவாக இருப்பதாக உணர்கிறேன். இந்த நிறைவுடனே என் எழுத்துப் பயணத்தை தொடர்கிறேன்.
Be the first to rate this book.