பசி என்கிற நாவல்தான் முதன்முதலாக வெளிவந்த என் சொந்த நாவல். பசி என்கிற நாவலை அதே தலைப்புடன் ஐந்து பாகங்களாகத் தொடர்ந்து எழுதவேண்டும் என்றுதான் எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆசை. என் சுயசரிதமாக அதைப் பூரணமாக அமைத்து விட நான் விரும்பவில்லை. நெப்போலியன் மாஸ்கோவை அடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஹிட்லர் இங்கிலாந்து தேசத்தைக் கைப்பற்றியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து பார்ப்பதில் ஆனந்தம் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அதே போல என் வாழ்க்கையிலும் (உங்கள் வாழ்க்கையிலும்தான்) எத்தனையோ திருப்பங்கள் இருக்கின்றன. அந்தத் திருப்பங்கள் ஒவ்வொன்றிலும் உண்மையில் நாம் தொடர்ந்த பாதையைத் தவிர வேறு பாதையை நாம் பின்பற்றியிருந்தால் நம் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதில் உற்சாகம் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். இந்த உற்சாகத்தை எனக்கே நான் பரிமாறிக் கொள்ளச் செய்த முயற்சியின் விளைவுதான் பசி.
- க.நா. சுப்ரமண்யம்
Be the first to rate this book.