நம் புராணத்தில் பரசுராமனுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஆனால் பரசுராமனின் வரலாறு அதிகம் தமிழில் பேசப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் ‘பரசுராமாயணம்’ நூலை எழுதி இருக்கிறார் கு.சடகோபன்.
திருமாலின் அவதார நோக்கங்களைப் பற்றி முதலில் பருந்துப் பார்வையில் கூறும் இந்நூல், பின்பு பரசுராமனின் பிறப்பைப் பற்றியும், அவன் சிவனிடத்தில் எப்படி பரசு எனும் கோடாரியைப் பெற்றான் என்பது குறித்தும் விரிவாக விளக்குகிறது.
பரசுராமன் தனது தந்தையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பெற்ற தாயையே கொல்வது, ராவணனையே வீழ்த்திய கார்த்த வீர்யார்ச்சுனனிடம் இருந்து ஓமதேனு எனும் பசுவை மீட்கச் செல்வது போன்ற சுவைமிக்க பகுதிகள் இந்நூலில் ஏராளம். ஸ்ரீ ராமன் பரசுராமனுடன் மோதும் காட்சிகள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன.
பரசுராமனின் அவதார நோக்கத்தை இந்த நூல் அழகுத் தமிழில் சிறப்பாகப் பதிவு செய்கிறது
Be the first to rate this book.