மனித வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் தீமையை அழித்து நன்மைகள் வழங்க இறைவன் மனிதனாகத் தோன்றிய கதையை உரைப்பவை இராமாயணமும் மகாபாரதமும் இவை வீரகளியங்கள் எனப்பட்டன. மகாபாரதக் கதைகள் சங்க காலந் தொட்டே மக்களிடம் பரவியிருந்ததைச் சங்கப் பாடல்களின் குறிப்புகளிலிருந்து காண்கிறோம். பாரதம் முழுமையாக இருந்தாலும் அதிலிருந்து சில பகுதிகள் மட்டும் தனித்தனிக் காப்பியங்களாக மகிழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக அல்லியரசாணி மாலை, நளவெண்பா போன்றவற்றைக் கூறலாம். அதுபோல மற்றொரு காண்ட காப்பியமாகத் திகழ்வது பாஞ்சாலி சபதம். வியாசரை அடியொற்றி எழுந்துள்ளது பாஞ்சாலி சபதம். அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டு விடுதலையைத் தூண்டும் வகையில் மகாகவி பாரதியாரால் எழுதப்பட்டது. அக்காப்பியத்தின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள நுலே பாஞ்சாலி சபதம் உறைபொருளும், மறைபொருளும் என்ற இந்த நூல். 1987இல் முதல் பதிப்பைக் கண்டுள்ளது.
Be the first to rate this book.