இருபதாம்நூற்றாண்டின் இறுதியிலும், இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வர்ணிக்க இயலாத வரலாற்றுச் சோகங்களுக்கு ஆளான ஈழத்திலிருந்துதான் உன்னதமான தமிழ்இலக்கியம் உயிர்கொள்ள வேண்டும்.
ரத்தமும்கண்ணீரும் கனவுகளும் நிராசைகளும் இழப்புகளும் இறப்புகளும் மண்டிக்கிடக்கும் எங்கள் சகோதரத் தமிழர்கள் புலம்பெயர்ந்தபோது தாயகத்தை விட்டுவிட்டு தமிழை மட்டும் எடுத்துக்கொண்டு போனார்கள்.
அப்படிஉலக உருண்டையின் எல்லா வீதிகளிலும் விசிறியடிக்கப்பட்ட தமிழர்கள், தங்களின் போராட்டங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியில் இன, மொழி, பண்பாட்டுஅடையாளங்களை முற்றிலும் இழந்துவிடக் கூடாதென்ற கொள்கையைத் தங்கள் மூச்சிலே கலந்திருக்கிறார்கள்.புதியகலாசாரத்தில் கலக்க முடியாமலும், பழைய கலாசாரத்தை அறுக்கமுடியாமலும் புலம்பெயர்ந்த மக்கள் சிந்திக்கிற மனவியல், வாழ்வியல் பிரச்சினைகளை சிறுகதை என்னும் அழகான கலை வடிவத்தில், சுகமானநடையில், சுவையான மொழியில் வடித்துக் கொடுத்திருக்கிறார் கல்லாறு சதீஷ்.
- கவிப்பேரரசுவைரமுத்து
Be the first to rate this book.