பக்தியின் மொழி என்று பாரெங்கும் புகழப்படும் தமிழ்மொழியில் தோன்றிய பக்திப் பாடல்கள் தொகுக்கப்பட்டு சைவம் சார்ந்த நிலையில் திருமுறைகளாகவும் வைணவம் சார்ந்த நிலையில் திவ்விய பிரபந்தங்களாகவும் வெளிவந்தன. சைவம் சார்ந்தவை பன்னிரு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டன. அவற்றுள் பதினோராந்திருமுறை எனப்படுவது பன்னிரு அருளாளர்களால் அருளப்பெற்ற நாற்பது சிற்றிலக்கியங்களின் தொகுப்பாக உள்ளது. அவை சிவபெருமான். முருகன். விநாயகர். திருத்தொண்டர்கள் எனப் LIO நிலைகளில் பாடுபொருள்களைக் கொண்டுள்ளன. சைவ சாத்திரக்கருத்துகளும் சித்தாந்தத் தத்துவங்களும் ஏராளமாக நிரம்பியிருக்கின்ற சிறந்த பக்தி நூல், பக்திச்சுவையும் தத்துவச் செறிவும் நிறைந்து சைவம் தழைக்க உதவும் சிவநெறித் தொகுப்பாக இருப்பதைக் காணலாம்.
நூல் முழுமைக்கும் சிறந்த உரைகள் தோன்றியிருந்தாலும் காலத்திற்கேற்றபடி எளிமையும் தெளிவும் நிறைந்து எளிதாகப் படிக்கும் வகையில் சிறந்ததோர் உரையினை முனைவர் ஆனந்தி அவர்கள் எழுதியுள்ளார். கவிதை, கட்டுரை, ஆய்வு நூல்கள், உரை நூல்கள் எனப் பல்முகங்களைக் கொண்டு தமிழுக்குத் தொண்டுபுரிந்து வருகின்றார். அவருடைய உரைத்திறனுக்கு இந்த உரைநூல் சான்றாகும். அனுபவம் கலந்த உரைத்திறன் ஆற்றொழுக்கு நடையில் அமைந்து கற்பவர்க்குக் களிபேருவகை அளிக்கிறது.
Be the first to rate this book.