சித்தார்த்தன் பாரதியோ பெருகும் நீரில், கரையில், தேநீரின் இளஞ்சூட்டில், இளங்கதிரொளியில், மென்காற்றுக்கு உதிரும் சருகின் சப்தத்தில், தன் துயரின் நரம்பில், புன்னகையின் விசிப்பில், வெளிச்சத்தில், இருளில், மழையில், வெயிலில், கோடையில், குளிரில், உலக இயக்கத்தில், தேக்கத்தில் எல்லாவற்றிலும் புத்தரைப் பார்க்கிறான். தேடலின் பாதையெங்கும் பாரதிக்குப் புத்தரில் முடிகிறது. வாழ்வின் விளைவென்ன என்று தேடிய சித்தார்த்தன், தன் தேடலுக்கான விடை கிடைத்ததும் புத்தரானார். பாரதி ஜிப்ரானோ, தன் தேடலின் முடிவில் சித்தார்த்தனாகி இருக்கிறான். பாரதியின் சித்தார்த்தனும் புத்தருமாய் இத்தொகுப்பு முழுக்க ஒளி பரப்புகிறார்கள்.
- அ.வெண்ணிலா
Be the first to rate this book.