கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் வாசகர்கள் நன்கறிந்த எழுத்தாளர் சோம வள்ளியப்பன் முதலில் அடையாளம் காணப்பட்டது, அவருடைய பங்குச் சந்தை புத்தகங்களுக்காக. அவர் எழுதிய அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகம்தான் தமிழில் விரிவாக எழுதப்பட்ட முதல் பங்குச் சந்தை குறித்த புத்தகம். அதைத் தொடர்ந்து பங்குச் சந்தையின் பல்வேறு கூறுகளையும் தனித்தனியாகத் தொடர்ந்து அதே வரிசையில் எழுதிவருகிறார்.
அது, ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸோ, நேர மேலாண்மையோ, தலைமைப் பண்புகளோ. எழுதுவது எதுவாக இருந்தாலும், சோம வள்ளியப்பன் புத்தகங்கள் தெரியாத விடயங்களைத் தெளிவுபடுத்தும்; எளிமையாகவும் விரிவாகவும் இருக்கும் என்பது வாசகர்கள் கொண்டிருக்கும் முடிவு.
பங்குச் சந்தையில் பல ஆண்டுகளாக இயங்கியும் வெற்றி பெற இயலாதவர்கள், நட்டப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவும், தங்களை மாற்றிக்கொண்டு வெற்றி பெறவும் எழுதப்பட்டிருக்கும் மற்றொரு முக்கியமான புத்தகம், ‘பங்குச் சந்தை: ஆசை, பயம், ஏமாற்றம்.’
எப்படி செய்வது என்று தெரிந்திருந்தால் போதாது. எப்படி சரியாகச் செய்ய வேண்டும், எப்படி மட்டும் செய்ய வேண்டும் என்பதெல்லாம் உணர்வுகள் சார்ந்தவை. அவை குறித்து மேலை நாடுகளில் செய்யப்பட்டிருக்கும் ‘பிஹேவியரில் பைனான்ஸ்’ போன்றவை குறித்தும் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார். தவிர பங்குச் சந்தையில் எப்படி ஏமாற்றுவார்கள் என்பதையும் விவரிக்கும் புத்தகம் இது.
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
Be the first to rate this book.