"பௌத்த ஆய்வு உலகில், நண்பர் முனைவர் ஜெயபாலன் அவர்களின் படைப்பான 'பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூல் அறிஞர் பெருமக்களின் பாராட்டுதலைப் பெற்றுத் தடம் பதித்துப் புகழ் பூத்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. இந்நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெற்று வெளிவந்து, இவர்தம் வாசகர் வட்டத்தை விரிவாக்கியுள்ளது கூடுதல் சிறப்பிற்குரியது.
தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர். 'தமிழ் நூல்களில் பௌத்தம்' என்னும் தம் நூலால் பௌத்தத் தமிழ் இலக்கியப் பதிவுகளுக்கு அரிச்சுவடி எழுதிட, பேராசிரியர் ஜெயபாலன் அவர்களோ இன்று பௌத்தத்தில் ஆய்வுச் சுவடு பதித்து வெற்றி நடை போடுவது பெரிதும் வரவேற்று மகிழத் தக்கதாகின்றது!"
-பேராசிரியர் முனைவர் ப.மகாலிங்கம்
Be the first to rate this book.