மலைப்பிரதேசங்களில் குடிசைகளைக் கட்டிக்கொண்டு வாசம் செய்யும் 'லம்பாடி' என்று அழைக்கப்படும் 'பஞ்சாரா' ஆதிவாசி மக்களின் வாழ்க்கைப்பாடுகளை இந்தக் கதைகள் விவரிக்கின்றன. 'ஹப்பா மத்து பலி' என்ற தலைப்பில் கன்னட மொழியில் பி.டி.லலிதா நாயக் எழுதி வெளிவந்த சிறுகதைகளின் தமிழாக்கமே 'பண்டிகையும் பலியும்' சிறுகதைத் தொகுப்பு. உழைக்கும் வஞ்சகமற்ற புனித மனங்களுக்கும், மலைக்குடி, லம்பாடி மக்களுக்கும் இந்தத் தொகுப்பு சமர்ப்பணம்.
-பி.டி.லலிதா நாயக்
சாகித்ய அகாடமி தென் மண்டல அலுவலகம் பெங்களூருவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். கன்னடத்திலிருந்து தமிழுக்கு பல்வேறு படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற 'கிரவுஞ்ச பட்சிகள்' கன்னடக் கதைத்தொகுப்பை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். தெலுங்கு, மலையாளம், ஆங்கிலத்திலிருந்து கவிதைகள், கதைகள், நாவல், நாடகங்கள் என மொழியாக்கம் செய்துள்ளார்.
-ஜெயந்தி. கி.
பெங்களூர் பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் கன்னட துறைத் தலைவர். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார். புதுமைப்பித்தன் சிறுகதைகளை ஒப்பிட்டு அதில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சங்க இலக்கியங்களை கன்னடத்திற்கு செம்மொழி மையத்திற்காக மொழியாக்கம் செய்தவர். கன்னடத்திற்கும் தமிழுக்கும் சிறந்த இணைப்புப் பாலமாக மொழிபெயர்ப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
-முனைவர் க.மலர்விழி
Be the first to rate this book.