பண்டையத் தமிழரின் அறப்பண்பாடும் முத்தமிழ் கலைஞர்களின் வாழ்வியலும் என்ற நூல் பெறப்போகும் வரவேற்பு முனைவர் அ.வசந்தா அவர்களை பொதுவுடமை குறித்த நூல்கள் பல படைத்திட உந்திச்செல்லும் என்ற உணர்வு எனக்குத் திண்ணமாக உள்ளது.
காலத்திற்கேற்ப நல்லதொரு நூலினைப் படைத்திருக்கிற முனைவர் அ.வசந்தா அவர்கள் இந்நூலுள் புதிய சிந்தனைகளை வாசகர்களுக்கு விளம்பி விருந்து படைத்துள்ளார். பொதுவுடமைச் சிந்தனை வளரவேண்டும் வாழவேண்டும் என எண்ணுபவன் நான். இவ்வெண்ணத்திற்கு வித்தாகவும் வேராகவும் இந்நூல் நின்று சிலபல கனிகளைத் தந்து நிற்குமென நம்புகிறேன். இந்நற்பணி மேன்மேலும் சிறக்க எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.
Be the first to rate this book.