திராவிடத்தின் செல்வத்தைச் சுரண்டும், வடநாட்டு வணிக வேந்தர்களின் பண பலம், தொழில் பலம் இவற்றினுக்கு அரணாக அவர்களுக்கு அமைந்துள்ள அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கண்டால், எவ்வளவு வேகமாக, புதியதோர் பொருளாதார ஏகாதிபத்யம் உருவாகிக் கொண்டு வருகிறது என்பது விளங்கும். வடநாட்டவர் இங்கு ஆலை அரசர்களாய் பணத்தோட்டக் காவலராய் இருப்பதுடன், கடல் வியாபாரத்திலும் அவர்களே இன்று மிகுந்த செல்வாக்கும் பெற்றுள்ளனர்.
Be the first to rate this book.