விற்பனையில் சாதனை படைத்த, பணத்தின் மீதான ஆளுமையை வசப்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கான வழிமுறைகளைக் காட்டும் புதினங்களான தி சைக்காலஜி ஆஃப் மனி மற்றும் சேம் ஆஸ் எவர் போன்ற படைப்புகளின் ஆசிரியரிடமிருந்து,
நம்மில் பலரும் பணத்தை செலவு செய்வது எப்படி என்பதை அறியாதவர்கள்தான். மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து, நம்மை பரிதவிப்பில் விடும் பொருட்களை நாம் வசப்படுத்த விழைந்து விரைகிறோம். அல்லது. சேமிக்கும் எண்ணத்தில், நம் வாழ்க்கையை சிறப்பிக்கும் பொருட்களை வாங்க பயந்து பின்வாங்குகிறோம். அதாவது, தேவைக்கேற்ற விருப்பம் மற்றும் பொறாமை, சௌகரியம் மற்றும் மிகை, பயன்பாடு மற்றும் அந்தஸ்து போன்ற நிலைப்பாடுகளுக்கான புரிதல் இன்றிக் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளோம்.
தி ஆர்ட் ஆஃப் ஸ்பெண்டிங் மனி, அதாவது பணம் செலவு செய்யும் முறை அது ஒரு கலை எனும் இந்தப் புத்தகம் உங்களுக்கு வரவு-செலவு, சிக்கனம், ஒரே சொடுக்கில் அத்தனைக்குமான தீர்வு போன்றவற்றை சிலாகிப்பதற்காக படைக்கப்பட்டதல்ல. மாறாக, பணத்திற்கும் உங்களுக்கும் இடையேயான உறவைப் பற்றிய புரிதலையும் அதை மறுபரிசீலனை செய்து சீர்படுத்தி அதன், விளைவாக பணம் உங்களின் பின்னால் கைகட்டி சேவகம் செய்யக்கூடிய நிலையை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலை வழங்குவதற்காகப் படைக்கப்பட்டுள்ளது.
பணம் சம்பாதிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது போன்ற முனைப்புகளில் மார்கன் ஹவுசலின் வழிகாட்டுதல் பவரை மீண்டும் ஆழ்ந்து யோசிக்க வைத்து அதன் மூலம் பயன்பெற ஊக்குவித்தது. இப்போது, பணம் தொடர்பான சமன்பாட்டின் மறுபக்கத்தை நோக்கி அவர் பார்வையைத் திருப்பியுள்ளார். அதாவது பணத்தை செலவு செய்யும் முறை, ஒரு தொலைநோக்குப் பார்வையுடன், நுண்ணறிவுடன், முதலீடுகளின் மூலம் பெறக்கூடிய மதிப்பு மிக்க வருமானம் மன நிம்மதியைத் தருவது ஏன். வருமானத்தைக் காட்டிலும் எதிர்பார்ப்புகள் முக்கியத்துவம் பெறுவது ஏன், பணத்தைத் திறம்படக் கையாளுவது, வரவு செலவு கணக்கு விவரத் தாள்களில் அல்ல, ஆனால், தன்னிலை அறிந்த புரிதலில் அடங்கியுள்ளது ஏன் என்பதை திறம்பட எடுத்துரைத்துள்ளார்.
இந்தப் புத்தகம், செல்வந்தராவதற்கான வழியைச் சொல்வதல்ல. உங்களிடம் உள்ளதைக் கொண்டு அதீத பயன் தரும் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வது எப்பட என்றும், உங்கள் விருப்பங்கள் மதிப்புள்ளவைதானா என்பதை நீங்கள் அறிந்திடவும் பெரிதும் உதவிடும் என்பது நிச்சயம்.
Be the first to rate this book.