இந்நூல் பல்லவர் வரலாற்றைப் பலர் ஆய்வு செய்து எழுதியுள்ளனர். ஆனால் பல்லவரது வடமொழி, தமிழ்மொழி ஆகியவற்றில் எழுதப்பட்ட செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலங்களைத் தெளிவாகப் படித்து பல்லவ அரசர்களின் வரலாறு, பல்லவர் காலத்துப் பொருளாதாரம், நிர்வாகம், சமூகம், சமயம் கலைகள் பற்றி திறம்பட ஆய்வு செய்து நூல் எழுதிய முன்னோடி வரலாற்று ஆசிரியர்களில் ஒருவர் முனைவர். சி.மீனாட்சி ஆவார். அவர் ஆங்கிலத்தில் பல்லவர் காலம் குறித்து எழுதிய தலைசிறந்த இந்நூல் தற்போது தமிழில் முதன்முறையாக வெளிவருகிறது. பொதுமக்களால் அதிகம் அறியப்படாத இந்நூல் தமிழ் வாசகர்களுக்கு மிகுந்த பயன்படாக இருக்கும்.
இந்நூல் ஆங்கிலத்தில் பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி மற்றும் கே.கே.பிள்ளை ஆகியோரின் வழிகாட்டுதலில் உருவான மிகச்சிறந்த படைப்பாகும். ஆங்கிலத்தில் வெளிவந்த இந்நூலைத் தற்போது பேராசிரியர் கு.சேதுராமன் அவர்கள் சிறப்பாகத் தமிழில் தந்துள்ளார்.
-வெ.வேதாசலம்
Be the first to rate this book.