என்னுடைய முதல் நாவல் இது. கல்லூரி முடித்த நாட்களில் என் மாமாவுடனான ஓர் உரையாடல் கலாச்சாரம் நோக்கி நகர்ந்தது. அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது "நம்ம நாட்டுல கல்யாணம் எதுக்குப் பண்றதுன்னே தெரியறது இல்ல. ‘ஆம்பளையப் பொறுத்தவரை பொண்டாட்டின்னா கூப்ட உடனே வரணும். அதே சமயம் பொம்பளைகளப் பொறுத்தவரை இதுக்குத்தானே, எடுத்துக்க போ'ங்குற மனநிலைல தான் வாழ்றாங்க. உண்மையாவே இல்லற வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்றது கொஞ்சப்பேர் தான்" அப்டின்னு சொன்னார். இந்த கருத்தின் அடிப்படையிலேயே கதை தொடங்குகிறது.
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் திருமண நிகழ்வு, அதுவும் முதலிரவிற்காக அதிகம் மெனக்கெடுகிறார்கள். ஆனால் அந்த மெனக்கெடல் பூர்த்தியாகிறதா? என்றால் இல்லை. அது சில நாட்களிலேயே சலிப்பாக மாறிவிடுகிறது. அதுவும் இந்தத் தலைமுறைக்குக் காதலில்லாக் காமமே பிரதானமாக இருக்கிறது. இரண்டும் கலந்ததுதானே இல்லறம். மனதில் அன்பும் கட்டிலில் அறமும் இருக்கிற வாழ்விலேதான் பண்பும் பயனும் இருக்கிறது என்று கதையின் நாயகன் செந்திலின் வழியாகவும், நாயகி கங்காவின் வழியாகவும் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.
Be the first to rate this book.