இந்நூல், பாலஸ்தீன் மக்களின் அயராத, அஞ்சாத போராட்ட முயற்சிகளை விவரிக்கும் ஓர் ஆழமான ஆய்வாகும். நூலின் தொடக்கத்திலேயே, புகழ்பெற்ற இஸ்லாமிய சிந்தனையாளரும் அறிஞரும் இந்த நூலாசிரியருமான சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்கள், திருக் குர்ஆன் அத்தியாயம் அல்-அன்பால் 29வது வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். அதில், அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு “ஃபுர்கான்” ஒன்றை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறான். “ஃபுர்கான்” என்ற சொல்லின் விளக்கமாக, குர்ஆன் உரையாசிரியர் ஒருவரின் கருத்தையும் அவர் மேற்கோளிடுகிறார்: “ஃபுர்கான் என்பது ஓர் அளவுகோல் அல்லது அளத்தல் முறை. ஓர் அளவுகோலின் பணி, தூய்மையிலிருந்து அசுத்தங்களை வெளிப்படுத்துவதே. நம்பிக்கையாளர்களின் கூட்டு முடிவுகள், தீய சக்திகளுடனான அவர்களின் மோதல்கள், அழுகிய கூறுகளுக்கு எதிரான அவர்களின் போராட்டங்கள் – இவையனைத்தும் தாமாகவே ஃபுர்கானாக மாறுகின்றன.
இதன் மூலம், பாலஸ்தீன் மக்கள் அல்லாஹ் அளித்த இந்த ஃபுர்கான்-அதாவது அளவுகோல், தரம், ஒளி-இவற்றின் வழிகாட்டுதலோடு சியோனிச ஆக்கிரமிப்புக்கும் தாக்குதலுக்கும் எதிராகத் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து வருகின்றனர் என்பதே ஆசிரியரின் கருத்தாகும்.
Be the first to rate this book.