புரட்சியாளர் பழனிபாபாவின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எங்களது நெடும் பயணத்தின் நான்காவது படைப்பாக வெளிவருகிறது “பழனிபாபா - தலைவன் குரல்.”
பழனிபாபா நடத்திய பத்திரிகைகளில் அவர் எழுதியவை மற்றும் பாபா கைப்பட எழுதி இதுவரை அச்சிலேறாதவற்றின் தொகுப்பே இந்நூல். 1990 மற்றும் 1993-ம் ஆண்டுகளில் 2 முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைக்கப்பட்ட பாபா, தன்மீதான அடக்குமுறைகள் குறித்தும், அதற்கெதிரான அவரது போராட்டங்கள் பற்றியும் அவரே பதிவுசெய்துள்ள ஆவணம் இது. மேலும் மும்பை காட்கூப்பர் சிறையில் பாபா எதிர்கொண்ட இன்னல்களையும் இந்நூலின் வழியே அறியலாம்.
ஒரு தலைவராக பழனிபாபா இம்மண்ணில் களமாடியதும், அவருக்குப் பின்னால் வெகுமக்களும் இளைஞர்களும் திரண்டதும், அச்சமயங்கள் அவர் எதிர்கொண்ட சவால்களுமே இப்புத்தகம். ஒருவகையில் இது பழனிபாபா எழுதிய குறிப்பிட்ட காலகட்டத்தின் 'தன்வரலாறு' என்றும் சொல்லலாம்.
***
புனிதப்போராளி பத்திரிகை பொதுஅறிவுக் களஞ்சியம் வரலாற்று ஆதாரம், அதன் அனைத்து இதழ்களையும் சேகரித்து, பத்திரப்படுத்தி பைண்ட் செய்து வையுங்கள். ஒரு இதழின் ஒரு வரியைக்கூட அழியவிட்டுவிடாதே. என் அழிவுக்குமுன் என் அனுபவங்களை அள்ளித்தெளித்து வைக்கிறேன். நீ அதை அள்ளித் தொகுத்துவை அடுத்த தலைமுறைக்கும் பயன்படும். என் எழுத்துகளைப் பேச்சுகளை மட்டும், உன் வாரிசுகளுக்கு வைத்துவிட்டுப் போகவும். "இலட்சியவாதிகளுக்கு அழிவுண்டு அல்லது அழிக்கப்படலாம்; ஆனால் இலட்சியங்களை எவராலும் அழிக்க முடியாது!" அதன் இலட்சினைகளே இந்தப் பதிவுகள். எனவே, இதை வெறும் பத்திரிகை என்று பார்க்காதே!
- புரட்சியாளர் பழனிபாபா
Be the first to rate this book.