இந்த நூல் இராபர்ட் கால்டுவெலுக்கு முன்னரே. செம்மொழித் தமிழ் தகுதிப்பாட்டை பல ஐரோப்பியர்கள் தங்கள் தமிழ் மொழிக் கற்றல், பிறமொழிகளுடன் ஒப்பிடுதல். இலக்கணப் பட்டறிவுகள் மூலம். உயர்தனிச் செம்மொழி பயணத்திற்கு எப்படி வித்திட்டனர் என்று தெளிவாகவும் விரிவாகவும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவர்கள் போர்ச்சுக்கீசு, டச்சு. செர்மன், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தமிழ் இலக்கணத்தை எழுதி, அறிவுப் பரவல் வளர்ச்சி செய்தது பற்றி விளக்குகிறது. இருமொழி, மும்மொழி அகராதிகள் தொகுத்து, மொழியியல் ஆய்வு நடத்தி, தமிழின் சிறப்புகளை எடுத்துரைத்து, தமிழ்ச் சொற்கள். சமற்கிருதச் சொற்கள், வேர்ச்சொற்கள் மற்றும் கிறித்தவ கலைச்சொற்கள் பற்றி வெளியிட்ட வரலாறு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் வேர்களும் விழுதுகளும் பல ஐரோப்பியர்களால் அறியப்பட்டு தமிழாய்வு நடந்தது. வரலாற்று ஆவணச் சான்றுகள் வாயிலாக இந்நூல் தமிழின் புதிய பரிமாணங்களை அறிவிக்கிறது.
Be the first to rate this book.