கடவுளோடு எனக்கு என்ன விரோதம்? அவரை நான் ஒரு முறை கூட சந்தித்ததில்லை "என்ற நையாண்டிச்சொல் வீச்சில் பெரியாரின் பகுத்தறிவுச் சுடர் தெரிக்கிறது...!
புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர் பெரியார். பெரியார் என்றால் வெறும் கடவுள் எதிர்ப்பு மட்டுமே அல்ல... சுயமரியாதை. மத மறுப்பு. மூடநம்பிக்கை மறுப்பு. பெண்ணுரிமை. சாதி ஒழிப்பு. திராவிடக் கொள்கை. பிராமணர் எதிர்ப்பு. போன்ற, தான் நம்பிய கொள்கைகளுக்காக வாழ்நாளெல்லாம் போராடியவர் பெரியார்...!
தலைவாழை இலைவிரித்து தமிழர்களுக்கு பகுத்தறிவு விருந்து பரப்பியவஉ பெரியார். விரும்பியதை உண்ணலாம். வேண்டாத கசப்பை விலக்கி வைக்கலாம். அது அவரவ நாவின் ருசி தேடலை பொறுத்தது.. வஉணாசிரமமும், இந்தி திணைப்பும் ஒட்டிப் பிறந்த ரெட்டை பிசாசுகள் என்று கடுமையாக விமர்சித்தவர் பெரியார்.
சென்னை தமிழ்நாட்டுக்கும் வேண்டாம் ஆந்திராவுக்கும் வேண்டாம் சென்னையை தனி மாகாணம் ஆக்குங்கள் என்று ஆந்திராகாரர்கள் கோரிக்கை வைத்த போது மடத்தை விட்டு வெளியேறிய ஆண்டிக்கு நந்தவனத்தைப் பற்றி என்ன கவலை? அது தமிழ்நாட்டின் கவலை. சென்னை மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம்" என்று கூறியவர் பெரியார்.
"நான் விஸ்தீரனத்துக்காக போராடுகிறவன் அல்ல. விடுதலைக்காக போராடுகிறவன் என்று சொன்னார். ஏனெனில் அவர் அப்போது கேட்டது இந்திய எல்லைக்கு உட்பட்ட மொழி வாரி மாகாணம் அல்ல சுதந்திர தமிழ்நாடு.!
"என் நாட்டிலே உனக்கு எதற்காக அதிகாரம் ஆட்சி? நீ ஏன் எங்களை சுரண்ட வேண்டும்? என்று வடவர் ஆட்சியை எதிர்த்த தந்தை பெரியாரின் இந்த உரிமைக் குரலே தமிழ்நாட்டை பெரியார் மண் என்று அழைப்பதற்கு காரணமாக இருக்கிறது...!
Be the first to rate this book.