முனைவர் சீமான் இளையராஜா அவர்கள், 'அயோத்திதாசப் பண்டிதர் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று பல நூல்களை எழுதியவர். அந்த வரிசையில் ”பகுத்தறிவுத்தடத்தில் அயோத்திதாசப் பண்டிதரும் தந்தை பெரியாரும்” எனும் இந்நூல் அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகளையும், தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் ஒப்பாய்வு செய்து பழமைவாத இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிராக முன்னெடுத்த கருத்தியல் போராட்டங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் மிக ஆழமாகவும் விரிவாகவும் விவரிக்கின்றது. கல்வி உரிமை, சாதி ஒழிப்பு, சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை, இந்துமத எதிர்ப்புப் போன்ற முற்போக்கு அரசியலுக்கு இந்திய அளவில் பெரும் பங்களிப்புச் செய்தவர்கள் அயோத்திதாசப் பண்டிதரும், தந்தை பெரியாரும் ஆவர்.
-தொல்.திருமாவளவன்
Be the first to rate this book.