ஒரு நவீன கவிதையின் தன்மையைக் கச்சிதமாக வடிவமைக்கும் வெண்ணிலா, தன் கடுமையான படைப் பாக்க நெறிகளின் வழியாக அறியப்படுபவர். இத்தொகுப் பின் கவிதைகள் அறம் பாடுவதைப்போல தன்னைத்தானே வடிவமைத்துக்கொண்ட தன்மையில் உள்ளன. இதில் ஓர் எளிய பரவசம், பாசாங்கின்மை, உண்மை கூறல், நெகிழும் நிலக்காட்சிகள் போன்றவை நிறைந்துள்ளன.
அதே வெண்ணிலா இங்கிருந்து விலகி,
வாழ்வதற்குத்தான் ஓராயிரம் கனவுகள்
மரணத்தின் முன் உயிர் ஒன்றே பெருங்கனவு.
என்றும் பேசுகிறார். சுருங்கக் கூறுதல், செய்நேர்த்தி, பெரும்பொருள் ஆகியவையும் கவிதையின் சிறந்த அடையாளங்கள். இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அந்த அம்சங்களைப் பூரணமாகக் கொண்டுள்ளன. இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் எண்ணாயிரம் அந்திகள் இருக்கும் போதே இந்த அந்திகள் ஏன் சலிப்பூட்டாமல் வந்து செல்கின்றன. அவற்றின் வழியாக இந்தக் கவிஞர்களும் கவிதைகளும் என்ன சொல்ல முற்படுகின்றனர் என்பதற் கிடையில் தான் நாம் காலாற நடந்துகொண்டிருக்கிறோம்.
- கண்டராதித்தன்
Be the first to rate this book.