புனைவும் தன்வரலாறும் பிரிப்டா வல் முழுமையுடன் இணைவது. இரண்டு பாம்புகள் கலவியில் கிறங்கித் தம் வால்நுனியில் எழுந்து ஆடும் பேராடல் போன்றது. டிலுக்ஸன் மோகளின் படுபட்சியில் இந்த உயர்தனிச் சிறப்பைக் காணலாம். பலருக்கும் வசப்படாதது டிலுக்ஸனிடம் நளினமும் துயரமும் நுட்பமும் சொற்செறிவும் சேர மலர்ந்திருக்கிறது. இந்தப் படைப்பில் இடம்பெறும் யொய்காவின் சித்திரிப்பும் அவள் எழுப்புகிற கேள்விகளும் எமக்கு வேறொரு உலக அனுபவத்துக்கு வழி காட்டுகின்றன. ஒவ்வொரு கனவுக்கும் ஓராயிரம் கதவுகள் உள்ளன. ஆனால், அவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் திறந்துவிட முடியாது. இப்படைப்பின் கடைசி வரியில் டிலுக்ஸன் சொல்கிறார்: "இது குறித்துப் பின்னர் சொல்கிறேன்." அதுதான் ஆயிரம் கதவுகளை மெல்லத் திறக்கும் வழி. டிலுக்ஸனுக்கு இது முதற் காலடி அல்ல. அவரது பெருங் காலடி, - கவிஞர் சேரன்
Be the first to rate this book.