படுகளக் காதை, நாவல் வடிவத்தில் நந்தன் எழுதியிருக்கும் திரைப்படத்திற்கான கதை. படிக்கப் படிக்கக் காட்சிகளாக விரிவதுதான் நந்தனின் திரைக்கதைத் திறமைக்கான
சான்று. இது ஒரு சஸ்பென்ஸ்
திரில்லர் வகையிலான கதை.
படிக்கத் தொடங்கும் இளம் வயதினருக்கு விறுவிறுப்பான,
படுகளக் காதை போன்ற நாவல்களும் அவசியம் என்று கருதுகிறேன்.
இரண்டே இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் போராட்டத்தை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரிக்கிறார் நந்தன். ஒவ்வொரு நொடியும் குழந்தைசாமிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற பதட்டம் தோன்றுகிறது. எழுத்தில் படிப்பதற்கே அதை அருகிலிருந்து பார்ப்பது போலிருக்கிறது. படமாக எடுத்தால் இன்னும் பலமடங்கு விறுவிறுப்பானதாக அமையும்.
கவிதா பாரதி
இயக்குநர், திரைக் கலைஞர்
Be the first to rate this book.