திருச்சிராப்பள்ளியில் சிறந்து விளங்கும் பிஷப் ஹீபர் கல்லூரியில் திறம்படப் பணியாற்றிய முனைவர் ஓய், டென்னிசன் அவர்களின் எழுபத்தைந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்படுகிறது இந்நூல்.
மொழியியல், மொழி வரலாறு ஒப்பியல், இலக்கியக்கொள்கை நெறி, தொல்காப்பிய இலக்கியக்கொள்கை சங்க இலக்கியம். திருக்குறள். முத்தொள்ளாயிரம், சிற்றிலக்கியம், சமய இலக்கியம்,ஓலைச்சுவடிகள். இதழியல் எனப் பல்வேறு வகையில் விரிந்த ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கி அமைகின்றது.
கட்டுரை அளித்தோரில் சிலர் முதுபெரும் பேராசிரியர்கள்: சிலர் பல்கலைக்கழகத் துறைகளையும் கல்லூரித் துறைகளையும் திறம்பட நடத்தியவர்கள்: சிலர் நிறுவனங்களைத் தோற்றுவித்தவர்கள்: சிலர் உயர்நிலைகளில் செவ்வனே பணியாற்றுகின்றவர்கள்: சிலர் எடுத்துக்கொண்ட துறைகளில் ஆழங்காற் பட்டவர்கள்: சிலர் ஆய்வுக் களங்களில் விரிவுடையவர்கள்: சிலர் மலர்ந்துவரும் இளம் ஆய்வாளர்கள்.
பன்முகப் பார்வையுடைய இந்தொகுப்பு ஆய்லாளர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய சிந்தனைகளை வழங்கத் துணைநிற்கும்.
Be the first to rate this book.