படிமம் பற்றிய இந்நூல் சிறியது! ஆனால் இது செப்பமான செய்திகளின் பெருஞ்சுரங்கம்! தமிழில் வளமான இலக்கியக்கொள்கைகள் இருக்கின்றன. இருந்தாலும் புதியனவற்றை உள்வாங்கித் தமிழ் இலக்கியக்கொள்கைகளை வளப்படுத்த வேண்டியது நம் கடமை. இந்திய அளவிலும் உலக அளவிலும் உள்ள இலக்கியப் பார்வைகளின் வழியே தமிழிலக்கியத்தைப் புரிந்து கொள்ளவேண்டியது காலத்தின் தேவையாகும். இந்நூலாசிரியர் பேராசிரியர் மு.சுதந்திரமுத்து அவர்கள், படிமம் எனில் காட்சியை மட்டுமே குறிக்க வேண்டும் என்பதைப் பல்வேறு சான்றுகளின் வழியாக வலியுறுத்துகிறார். தமிழுக்குப் படிமம் புதிதானதில்லை என்ற வகையில் தொல்காப்பிய மரபின் அடிப்படையில் படிமத்தை விளக்கியுள்ளார். இந்நூலைப் பல்கலைக்கழக மாணவர்கள், பாடமாகவும் படித்துள்ளார்கள். நூறடிப் பள்ளத்தில் இருந்து அகழ்ந்து எடுத்த கல்லின் குறுக்குவெட்டில் தென்படும் வண்ணப்படிவங்கள் போலவே படிமக்கருத்துகள் நிறைந்த இந்த நூல், கவிதைகளை ருசிப்பவர்களுக்குத் தேனாய்ச்சுவைகூட்டும்.
-முனைவர் க. சு. சங்கீதா, கல்வியாளர்.
Be the first to rate this book.