தாமிரபரணியின் துணையாறுகளில் ஒன்றான பச்சையாற்றின் கரையில் வாழும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் இரு தலைமுறை வாழ்க்கையினை இந்தப் புனைவு பேசுகிறது.
சாதிய வன்முறைகளுக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் எதிரான போரை கருத்துக் களத்திலும், அன்றாட வாழ்விலும் தலித் மக்கள் முன்னெடுத்து வருகிறார்கள்: வெற்றியும் வசப்பட்டு வருகிறது.
மானுட சமத்துவத்தில், விடுதலையில் ஆர்வங்கொண்ட, சக மானுடர்களாகிய நாமும், அவர்களோடு நெருங்கி வாழும் இடைநிலைச் சாதியினரும் தோழமையோடு இணைய வேண்டிய காலம் இது. அந்தப் புதிய சமூகத் திறப்பை உண்டாக்கும் புத்தொளியே இந்த நாவலின் மையச் சரடு.
மேம்பட்டு வரும் அந்த மக்கள் வாழ்வை பச்சையாறு போல, வெகு சுவாரசியத்துடன், அசலாக, இந்த நாவல் பதிவு செய்கிறது.
Be the first to rate this book.