வேள்பாரி வாசகர் மன்றம் வாசகப் பரப்பி னூடே தோழமையை மலரச்செய்து படர்கிறது. செயலும் சிந்தனையும் ஆக்கமும் ஊக்கம் பெறும் களமாக வாசகர் மன்றம் வினையாற்றுகிறது. இம்மன்றம் மூலமாக இணைந்த வாசகர்கள் பறம்பு பாட்டாபிறை குழுவின்மூலம் படைப்பாளி களைக் கண்டறிந்து அவர்களின் படைப்பு களை நூல்களாக வெளியிட்டுப் புதிய துவக்கங்களை உருவாக்குகின்றனர்.
-எழுத்தாளர் சு. வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர்.
ஒளியின் துணைகொண்டு மௌனத்தின் உரையாடலாய் சமூகத்தின் புறத்திலும் அகத்திலும் வெளிச்சம் பாய்ச்ச முயல்கின்றன டேனியல் ராஜாவின் கவிதைகள். தொகுப்பில் காதல்பற்றிய வெளிப்பாட்டை ரசனையுடன் சொல்வது மட்டுமன்றி இன்றைய அரசியலை முன்வைத்து, சமரசம் செய்யாமல் அவர் எழுதும் கவிதைகள் அறச்சீற்றம் கொண்டவை.
-கவிஞர் அமிர்தம் சூர்யா
டேனியல் ராஜாவின் கவிதைகள் மாய யதார்த்த வகை; சிறப்பான வாசிப்பனுபவம் தருபவை. யதார்த்த வாழ்வின் இனிப்பும் கசப்பும் சமமாகக் கலந்து எழுதுவாரென்றாலும் இறுதியில் நெல்லிக்காய் சுவைத்துத் தண்ணீரருந்தினால் கிட்டும் அசலான தித்திப்பு நிச்சயம்.
-பா. திருப்பதி வாசகன்
Be the first to rate this book.