இக்கதைகள், ஏறக்குறைய பதினைந்து வருடக் கனவுகள்: கடிவாளம் மறுத்த ஆரம்ப சீற்றங்கள்; வத்தியின் இருநுனிகளும் பற்றியெரியும் அக்னி கோபங்கள்; ஜ்வாலை முகங்கள்: ஆசைக் கனவுகள்: தீய்ந்த கருகல்கள்; பச்சை மரம் வடித்த ரத்தங்கள்; பட்டமரத்தில் வடிந்த பால்கள்; உயிரோடு புதைத்துவிட்ட உயிர்கள்; சமாதிமேல் நட்ட செடிகள்: புதைத்த உயிர் வீசும் பூமணங்கள். அடுக்க அடுக்க ஓயவில்லை, அலுக்கவில்லை; இது திரௌபதியின் துகில்.
-லா.ச. ராமாமிர்தம்
Be the first to rate this book.