யுத்தத்தின் கடைசி நாட்களில் முள்ளி வாய்க்காலில் வாழ்ந்த மக்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அறிய வேண்டுமாயின் அல்லது அக்காலத்தில் இயக்கம் மக்களுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை அறிய வேண்டுமாயின் அல்லது அக்காலத்தில் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவினை எப்படித் தேடிக்கொண்டார்கள் என்பதை அறிய வேண்டுமாயின் அல்லது இராணுவ முன்னேற்றம் பற்றியதான கருத்துக்கள் மக்களிடம் எப்படி இருந்தது என்பதை அறிய வேண்டுமாயின் அல்லது இருபக்க குண்டு மழைகளின் நடுவே மக்களது இழப்புகளை(சாவு, விழுப்புண்) எவ்வாறு மக்கள் எதிர்கொண்டார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமாயின் அல்லது கடைசி யுத்த நேரத்தில் நடைபெற்றவற்றில் எதை அறிய வேண்டுமாயினும் "கடலலைகளை மேவிய கதை"
என்னும் "பச்சை மட்டை' இந்நாவலைப் படியுங்கள்.
நம்மோடு ஒட்டிய கதை என்பதாலும் நமது மக்களின் வலி சுமந்த கதை என்பதாலும் விறுவிறுப்பான நடையுடன் கதை நகர்த்தப்படுவதாலும் நாவலினை படிக்கத் தொடங்கி விட்டால் முடித்து விட்டே பொத்தகத்தை மூடவேண்டி வரும். அந்தளவிற்கு திறமாக உள்ளது.
இந்நாவல் நமது போராட்டம் தொடர்பான தன்னிலை ஆய்விற்கான களத்தினைத் திறந்து விட்டிருக்கின்றது. கடைசி நேரத்தில் நடைபெற்றவை மறைப்புகளின்றி சரி,பிழை என்பவற்றை திறந்த வெளியில் கதைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
அப்போதுதான் எதிர்காலம் ஐயமின்றிய நகர்விற்கு வழிகோலும், அதற்கான ஒரு தளமாக "பச்சை மட்டை"
எனும் இந்நாவலின் உரையாடலை நடுவப்படுத்தி தொடங்கப்படலாம்.
- கதிர் திருச்செல்வம்
Be the first to rate this book.