எந்த மொழியை எடுத்துக்கொண்டாலும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர்' என்று பாப்லோ நெருதாவை மதிப்பிட்டார் காப்ரியல் கார்சியா மார்க்கேள். இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல இருபத்தொன்றாம் தூற்றாண்டிலும் அவரே மகத்தான கவிஞர் நெருதா மறைந்து தாழ அரை நூற்றாண்டு ஆகிறது இந்தக் கால அளவில் அவர் அளவுக்கு உலகளாவிய செல்வாக்குப் பெற்ற ஒரு கவிஞரின் பெயரைக் கேள்விப்படவில்லை அவரை விடவும் தேர்ந்த மொழியிலும் துண்ணிய தளங்களிலும் புதுமை நோக்கிலும் எழுதிய கவிஞர்களும் எழுதும் கவிஞர்களும் வெவ்வேறு மொழிகளில் இருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கவிஞராக ஒருவரும் இல்லை இது அவரைக் காலத்தின் கொடையாகப் போற்றச் செய்கிறது.
Be the first to rate this book.