'நான் தொலைந்து போன வலத்தில் கருகிப் போன துர்வாடை மீதமிருக்கும் கடவுளை நம்பமுடியாத மானுடத்தின் இருப்பு' என்றெழுதும் ஜி. பி.இளங்கோவனின் கவிதைகள் கடவுளுடன் இயற்கையுடன் கூடிய அன்றாடங்களுடன் பூனைகளுடன் காதலியுடன் கடந்து சென்றுவிட்ட காலங்களுடன் காவிரி நதிக்கரையுடன் நெருடல்களின்றி சரளமாக உரையாடும் தன்மை கொண்டவை. மழை ஒரு தவிர்க்க இயலாத படிமமாக இவரைப் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது இளங்கோவனின் கவிதாமொழியை நான் எளிமையிலிருந்து தோன்றும் அழியாப் பிரகாசம் என்பேன். எனவே தான் 'பாலத்தின் தீயில் வெந்து தணிந்த உடல் ஒன்று காமத்தின் தீயாகக் கணிந்து கொண்டிருக்கிறது' என்றெல்லாம் எழுத இவராய் இயன்றுள்ளது. பிறை வருமென்று காத்திருக்கும் நோன்புக் காலத்தின் அதிகாலை பாங்கோ சையைப் புனிதம் எனச் சொல்லும் மனம் வாய்த்திருக்கிறது.
-கீரனூர்ஜாகிர்ராஜா
Be the first to rate this book.