பாவலர் வரதராசனில் 108 பாடல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை கால வரிசையாகவோ, கருத்து வரிசையாகவோ அடுக்கப்படவில்லை. முன்பில்லாகப் பல வண்ண மலர்களைச் சேர்த்துக் கட்டிய கதம்ப மாலையாக இது அமைந்துள்ளது, சங்கை வேலவன் பல இடங்களில், இதழ்களில் தேடியும், பலரை நாடியும் பாவலர் பாடல்களைத் தொகுத்துத் தந்துள்ளார். பாவலர் வரதராசன் பற்றிய சித்திரத்தை மனத்திரையில் வரைந்து கொள்வதற்கு வாகாக, அவரைப் பற்றிய பல ஆளுமைகளின் கருத்துத் தாரிகைகளும் இதில் தரப்பட்டுள்ளன. பல கோணங்களில் பலவிதமான கருத்தோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. 'கலைஞனுக்கு வாழ்க்கை எவ்வளவு நீளமானது என்பது கணக்கல்ல; அது எவ்வளவு கூர்மையால், இலக்கை நோக்கி வேகமாய்,குறி தவறாமல் தாக்கி அழிந்தது அல்லது அழித்த என்பதுதான் சிறப்பு' என்பது அவற்றில் ஒன்று.
Be the first to rate this book.