எண்பது தொண்ணூறுகளில் தமிழ் திரையிசைத் துறையில் இயங்கிய இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள் பற்றிய என்னுடைய உள்வாங்கல் நிலையின் சிலாகிப்புகளைக் கட்டுரைகளாக்கி இருக்கிறேன். குறிப்பாக, முன்னணி வரிசையை அடைய இயலாவிட்டாலும், நம் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிற திறமையாளர்களை மரியாதை செய்யும் விதமாக அமைந்திருக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு. அதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தொகுப்பு உருப்பெறவில்லை எனினும், இயல்பாக அப்படியொரு தோற்றம் அமைந்திருப்பதே இதன் சிறப்பு எனக் கருதுகிறேன். நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
-நட்புடன் நாடோடி இலக்கியன்
Be the first to rate this book.