அனுபவமென்பது வேறொன்றுமில்லை. அது, கடந்தகாலக் கசப்பையும் இனிப்பையும் நினைத்துப் பார்ப்பதே என்பர். நாமோ எந்த அனுபவத்தையும் நினைப்பதுடன் நிறுத்திக்கொள்வதில்லை மாறாக, இணைத்துப் பார்க்கிறோம்.
அந்த இணைப்பிலும் நினைப்பிலும் ஏதோ ஒருவித மகிழ்ச்சி கிடைக்கிறது.எது ஒன்றையும் எனக்கு நிகழ்ந்தது அல்லது எனக்கு மட்டுமே நிகழ்ந்தது என்பதுபோல வித்தியாசத் தொனியில் வெளிப்படுத்த நான் விரும்பியதில்லை ஆனாலும், இந்நூல் அப்படியான தடத்தில்தான் பயணிக்கிறது. தொடக்கத்தில் கசப்பையும் அதன்பின் இனிப்பையும் தருகிற முதுநெல்லியும் வேப்பம் பூவுமாகப் பொழுதுகள் மாறியுள்ளன.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்பாடல் துறையில் இயங்கிவரும் என்னை, கொஞ்சத்திலும் கொஞ்சமாக இந்நூலில் காட்டியிருக்கிறேன்.உண்மையில், அனுபவமென்பதுகூட நாம் நம் தவறுகளுக்குக் கொடுத்துக்கொள்ளும் பெயரே என்ற ஆஸ்கர் வைல்ட்டை இப்பதிவுகள் வழியே பார்த்துக்கொள்ளலாம்.
Be the first to rate this book.