இந்நூல் விமலராஜ் அழகையாவின் ஆய்வுப் புலமையை வெளிப்படுத்தும் தன்மையில் அமைந்துள்ளது. பாஸ்கா என்ற சமயச்சடங்கின் வளர்ச்சிநிலையில் உருவான பாஸ்கா நாடகங்களில் சமுதாய அரங்கிற்கான கூறுகள் உள்ளன என்பதே நூலாசிரியரின் கருத்தாகும். ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினர் மற்றொரு பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கிக்கொள்வதே பண்பாடு ஏற்றலாகும். பாஸ்கா பண்டிகையில் காணப்படும் பண்பாடு ஏற்றல் தொடர்பாக நூலாசிரியர் முன்வைத்துள்ள செய்திகள் கிறித்தவத்தைத் தமிழ்மண் சார்ந்த ஒன்றாக மக்கள் பாவிக்கும்படி செய்துள்ளன. “தங்கள் வாழ்வியலோடு கலந்த பல விடயங்களைத் தமிழர்கள் பாஸ்காவினுள் பிரதிபலிக்க வைத்துள்ளனர்” என்ற ஆசிரியரின் கருத்து சரியான ஒன்று. இது குறித்து விரிவாகவே நூலாசிரியர் விவாதித்துள்ளார்.
ஐரோப்பிய நாடகமுறையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட பாஸ்கா அரங்கை “இந்த நாடகமுறைமை மக்களின் அதிகார மையத்தை உடைத்து தேவாலய மையத்தை உருவாக்கியது என்று துணிச்சலாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மைச் சமயத்தினரின் வழக்காறுகள் கண்டுகொள்ளப்படாத நிலையில் தற்போது ஓரளவுக்கு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்நூல் அதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.
பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்
Be the first to rate this book.