'செல்வி'யின் வாழ்க்கையும் அவளை கட்டிய அறிவழகனின் வாழ்க்கையிலும் நிகழும் இயல்பான வாழ்க்கை பெரும் இலக்கியம். செல்வி தனது மகளின் திருமணத்திற்காக எடுக்கும் முடிவுகளும் சமநிலை மனதும் நம்மை விரக்தியின் விளிம்பிற்க்கே இட்டுச் செல்கிறது. கிராமத்து மனிதர்களின் வறியா நிலையிலும் பொங்கிப் பீறிடும் மானுட நேயத்தை குள்ளப்பொண்ணு ' எனும் மாட்டின் வழியே நமக்கு அடையாளம் காட்டுகிறார்.
பார்வேட்டை சின்னப்பாக்கள் ஏற்படுத்தும் அதிகாரத்திற்கு எதிரான எதிர் அதிகாரமாகட்டும்: கொலசாமி யில் தங்கவேலு பட்டுப்பாங்கியின் நேசமாகட்டும்: மீனாட்சி. ஆடுகளோடு கொள்ளும் நெகிழ்ந்த உறவாகட்டும்: தர்மராஜ் - பிருந்தா காதலின் வலியாகட்டும் பிறைமதி,தான் இழந்த இளம்பிராய விளையாட்டுகளின் நினைவாக கடக்கிற 'தொரட்டு நாட்களாகட்டும். ஒவ்வொரு அத்தியாயமாக பூக்கும் காதல்களும் அவை முறிந்த கதைகளும் நம் மனதை பிசைந்து விடுபவை.
திரைப்பட இயக்குனர் வ.கீரா அவர்களின் அணிந்துரையிலிருந்து.
Be the first to rate this book.