பிறந்து வளர்ந்த ஊர் சென்னை. திருமணம் வரை குரோம்பேட்டையில் வாசம். குரோம்பேட்டையை இவரது, 'மால்குடி டேஸ்' என்று சிலாகிக்கிறார். கதைகளில் பெரும்பாலும் குரோம்பேட்டையில் ஏற்பட்ட அனுபவங்கள் கதைகளாகச் சித்திரிக்கப்பட்டதாகச் சொல்கிறார். தற்போது சென்னை அண்ணா நகரில் வசிக்கிறார். பன்னாட்டு நிறுவனத்தில் பல வருடம் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். 90களில் தினமலர், வாரமலர். கணையாழி. தினமணி கதிர், கல்கி, சாவி, புதிய பார்வை, கலைமகள் போன்ற அச்சு ஊடகப் பத்திரிகைகளில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி உள்ளார். முதல் கதை 1993ல் வெளியானது. இப்போது இணையத்தில் சிறுகதைகள் எழுதி வருகிறார். பார்க்காமலே' இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
Be the first to rate this book.