தொ.மு.சி.ரகுநாதன் நெல்லையிற் பிறந்தவர். விடுதலைப் போராட்டத்தில் சிறைப்பட்டதால் கல்லூரிப் படிப்பை இழந்தவர்.தினமணி, சக்தி, சாந்தி இவற்றின் பத்திரிகை ஆசிரியர். சோவியத் செய்தித்துறையின் பத்திரிகைப் பிரிவின் முதலாசிரியர். தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் குறிப்பிடத்தக்கவர். சிறந்த கவிஞர், படைப்பாளி, நாடகத் திறனாய்வு வல்லுநர். பாரதியை முழுதும் இளங்கண்டுகொள்ள எழுதிவருபவர். நல்ல மொழிபெயர்ப்பாளர், புரட்சியாளர். 1. பாரதியும் ஷெல்லியும் 2. கங்கையும் காவிரியும் 3. பாரதி காலமும் கருத்தும் 4.பாரதி சில பார்வைகள் என்பவை சிதம்பர ரகுநாதன் அவர்களின் பாரதிபற்றிய ஆய்வு நூல்கள்.
நாட்டுமக்கள் அனைவரும் போற்றிப்புகழும் ஒப்பற்ற தேசியக் கவியின் படைப்பிலக்கியங்களில் தமது பார்வையைப். பதிப்பித்த ரகுநாதன் அவர்கள் அவரின் படைப்புக்களை வைத்தே அவரை இனங்காட்ட முயற்சித்ததின் விளைவே இம்மூன்று பொழிவுகளும். இப்பொழிவுகளை அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் நிகழ்த்தினார்கள். இவை, ஆறில் ஒரு பங்கும் அரசாங்கத் தடையும்""பாஞ்சாலி சபதம் உறை பொருளும் மறை - பொருளும், ''பாரதியின் கிருதயுகம் ஓர் ஆராய்ச்சி என்பனவாகும்.
Be the first to rate this book.