தமிழ்க்கவிஞர் வாழ்த்துரைத்தார் தமிழி சைக்குத் தனிப்புலவர் வாழ்த்திசைத்தார். நகைமு கத்தின் அமுதமொழி மங்கைமார் மலர்பொ ழிந்தே அரசியார் அரசர்நனி வாழ்க என்றார்!
தமைவாழ்த்தி னோர்க்கெல்லாம் அன்னம் வேலன் தகுநன்றி கூறினார்! தமிழும் பூவும் கமழ்கின்ற பெருங்கூடம் விட்ட கன்றார் கதிர்நாட்டு மக்களெலாம் வாழ்க என்றே!
மணித்தவிசில் வீற்றிருந்த பசிய கிள்ளை மலர்ச்சோலை தான்புகுந்து குடமெ டுத்தே அணித்தான குளிர்புனலை ஏந்தி, முல்லை அடிவார்ப்பாள் போற்காட்டிக் கீழ்க்கண் ணாலே தணிக்காத காதலொடும் அன்புள் ளானைத் தான்பார்த்த படியிருந்தாள்! வேலன் தேடி பணிச்சியரால் உளவறிந்தே விரைவில் அன்னம் பறக்குமுனம் பறந்தின்பம் பகிர்ந்தான் வாழி!
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.