தன்னிலை உணர்ந்த சுயமரியாதை, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்று எழுந்து போராடிய திராவிட இயக்கத் தின் ஒரு பிரிவு, அதிகாரத்தை நோக்கிய தேர்தல் அரசியல் கட்சியாக உருமாற்றம் அடைந்தது தமிழகத் தில் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று. பேராயக் கட்சியின் நிலவுடமையாளர்களுக்கு, செல்வந்தர்களுக்கு, பெரும்பான்மை சாதியினருக்கு எதிராக, அந்தக் கட்சி நடத்திய போராட் டங்களையும்,செய்துகொண்ட சமரசங்களையும் பதிவுசெய்யும் நூல்கள் இவை. திராவிட இயக்கத்தில், திராவிட அரசியலில் இறுதிவரை சாதி கடந்த நிலையில் கட்சியின் தொண்டனாக மட்டும் இருந்து போராடிய ஒரு தலித்தின் பதிவுகள் என்ற வகையில் இவை தலித் தன் வரலாற்று நூல்கள்.
ஒரு இயக்கத்தை அடிப்படை மட்டத்திலிருந்து மக்களின் செல்வாக்கு பெற்று ஆட்சி அதிகாரம் கட்சியாக படைத்த ஒரு மாபெரும் கட்டியமைப்பதில்வரும் பல இடர்ப்பாடுகளையும் தாண்டி தன் தீரா உழைப்பினாலும் இயக்கக் கொள்கையின் மீதிருந்த பற்றாலும் மக்கள் தலைவராக உருவெடுத்தவர் உடுமலை பா. நாராயணன். அவருடன் பண்ணன் கொண்டிருந்த நட்பினூடே ஒரு இயக்க வளர்ச்சியை படம் பிடித்து காட்டுகிறது இந்நூல்.
Be the first to rate this book.