மகிழ் ஆதனிடம் இயல்பாகக் கவித்துவ உணர்வு பீறிடுகிறது. அவன் சொற்களை எப்படிக் கையாளுவது என்று அறிந்துகொண்டிருக்கிறான். அவனது உலகில் பறவைகளும் வானமும் ஒளியும் மழைத்துளியும் பூக்களும் தானிருக்கின்றன. அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் எதுவுமில்லை. கண்ணாடிக் கோளம் ஒன்றில் வசிப்பவன் போல தன்னை உணருகிறான். குட்டி இளவரசன் புதிய கிரகத்தை கண்டு வியப்பதை போலவே மகிழ் ஆதனும் வியக்கிறான். அவன் கவித்துவமான சொற்களைத் தேர்வு செய்யவில்லை. எளிய சொற்களை நீர்க்குமிழிகளைப் போல மாற்றிப் பறக்கவிடுகிறான். உண்மையில் அவனது விளையாட்டு போலத்தான் கவிதையும் செயல்படுகிறது. காற்று அடைக்கப்பட்டவுடன் பலூனுக்கு ஒரு வசீகரம் உருவாவது போலவே கவிதையில் இடம்பெற்றவுடன் எளிய சொற்கள் அழகாகிவிடுகின்றன.
- எஸ். ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.