உறைந்ததைப் போல தோன்றும் ஓர் ஓவியத்தை, சட்டெனத் திறந்து, உள்நுழைந்து செல்வது போன்ற அபூர்வத்தை அளிக்கக் கூடியது இந்தச் சித்திரக் கற்பனை நாவல். பிரபஞ்சத்தின் பரப்பை அளவிடற்கரியது போல கியோர்கி யூதினின் மாயமும் யதார்த்தமுமான இக்கதை மற்றும் ஓவியத்தினூடனான அவரின் கற்பனை பரப்பின் விரிவும் முடிவு மறந்தது. மத்திய கால ருஷ்யாவின் மரபு, வாழ்வு, சடங்குகளின் அடையாளங்களைக் காணச் செய்பவனாக இருக்கும் எகோரி, மனிதனாகிப் போன ஒரு மாயக் கண்ணாடியும், நரம்புகளைப் போன்ற கோடுகளாலும், ரத்த அணுக்களைப் போன்ற வண்ணங்களாலும் ஆனது அது. அதில் நம்மையே காண்கிறோம்.
Be the first to rate this book.