"பிரயாணம் போவது குறித்தும், அயல்நாடுகளையும் கண்டறியாத நகரங்களை பார்ப்பது பற்றியும் நான் என் வாழ்நாள் முழுவதும் கனவு கண்டிருக்கிறேன். ஆனால், நடைமுறையில், எனது சிறிய ஆர்மேனியாவின் எல்லைகளுக்கு அப்பால் நான் போனதே இல்லை. நான் வேறு வேலை பார்க்கத் தகுதியற்றவளாக இருந்ததனாலேயே ஒரு லாரி டிரைவர் ஆனேன் என்று மக்கள் நினைக்கிறார்கள். சில பேர் எவ்வளவு விந்தை மனிதராக இருக்கிறார்கள்! அவர்கள் பிறர் மீது எந்தப் பழியையும் சுமத்திவிடுகிறார்கள். ஒருவன் தன்னையே அறிந்துகொள்ளவில்லை என்று கூடக் குறை கூறுகிறார்கள். உண்மையில், நான் என்னை ரொம்ப நன்றாக அறிவேன். முகம் பார்க்கும் கண்ணாடிமுன் நிற்கிறபோதெல்லாம் நீதான் உலகத்திலேயே மிகுந்த குரூபியாக இருக்க வேண்டும்; இல்லையேல் நீ ஏன் எவருடைய அன்பையும் ஒருபோதும் அடைமுடியாதவளாக இருக்கிறாய் என்று எனக்கு நானே கூறிக்கொள்ளும் அளவுக்கு நான் என்னை வெகுநன்றாக அறிவேன்.”
* நூலிலிருந்து…
Be the first to rate this book.