உண்மையைக் கண்டறியும்போதும் அதனோடு இணைந்திருக்கும் போதும் தனிமையும் துயரமும் இயல்பாக வந்து சேருகின்றன. இந்தத் தனமையும் துயரமுமே என் வாழ்வின் பெரும்பகுதியாகவும் இருக்கிறது. ஆனாலும் இது பேராறுதலைத் தருகிறது. இந்த ஆறுதல் நிறைவை ஏற்படுத்துவது. இந்த நிறைவு ஒரு பூரணத்துவமே. இதுவே மகிழ்வும்.
இந்தக் கவிதைகள் குறித்து எனக்குப் பெருமையோ ஆட்சேபனையோ இல்லை. என் வாழ்விலும் என் காலத்திலும் இப்படியெல்லாம் எழுத நேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான். மொழியையும் காலத்தையும் என்னையும் இணைக்க என்னளவில் முயன்றிருக்கிறேன் என்பதைத் தவிர வேறென்ன?
Be the first to rate this book.