தொன்மையான விலங்குகள் இட்டுச் சென்ற
வெவ்வேறு வடிவ முட்டைகளைப் போல்
கனத்த பாறைகள் கீழே சிதறியிருக்கும்
அடர்ந்த வனத்தின் நடுவில்
ஒரு பழமையான கோயில் நின்றிருக்கிறது
வரலாற்றிலி ருந்து வெளியேற்றப்பட்டது போல்
இன்னும் இடியாமல் நின்றிருக்கும்
கருவறையில் இருள் நிறைந்திருக்கிறது
கண்களுக்குப் பழக்கப்பட்டதும்
காலி யான உயர்ந்த பீடத்தின் மேல்
அந்த ஆளற்ற சிதைந்த கோயில்
கடவுளைப் போல் காட்சியளிக்கிறது
Be the first to rate this book.