உலகமே ஒரு நாடக மேடை நாம் ஒவ்வொருவரும் அதில் L160 வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சான்றோர்கள் சொல்கிறார்கள். ஆனால் முத்தமிழில் மூன்றாம் தமிழான நாடகத்திற்கு. முதன் முதலில் மேடை அமைத்தவர் சங்கரதாஸ் சுவாமிகள் என்று, நாடக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அன்று அவர் அமைத்த மேடையில் இன்று வரை பலரும் பல வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமது பன்னிரண்டாவது வயதில் நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களின் நாடகக் குழுவில் நடிகனாகச் சேர்ந்து, பின்னர் நாடகக் காவலர் ஆர் எஸ் மனோகர் அவர்களுக்கு இதிகாச நாடகங்களை எழுதி நாடகாசிரியர் ஆகி: இன்று 84 அகவையிலும் தொடர்ந்து நாடகப் பணி ஆற்றிக் கொண்டிருக்கும் கலைமாமணி கே.பி. அறிவானந்தம் தம் அனுபவங்களையும்இ தாம் சந்தித்த நாடகக் கலைஞர்களின் அனுபவங்களையும் இணைத்து நாடக ஆவணமாகவே இந்த நூலை உருவாக்கி இருக்கிறார்.
Be the first to rate this book.