சுமார் 40 வருடங்கள் இந்திய உளவுத்துறையில் பணியாற்றியுள்ள வேலையா கார்த்திகேயன், தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல் வேறு அம்சங்களை கையாண்டு முத்திரை பதித்தவர். இடதுசாரி தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய ஆழமான அறிவும், அவ்வியக்கங்களின் செயல்முறைகளை நீண்டகாலம் ஆராய்ந்த அனுபவமும் கொண்டவர்.
‘தேர்தல் வழி அரசியல் அதிகாரம் முதலாளித்துவ அடிவருடிகளின் ஆட்சிக்கே வழிகோலும்; ஆயுதப் புரட்சியே உழைக்கும் வர்க்கத்தின் கையில் அதிகாரத்தை சேர்க்கும்' என்ற சித்தாந்தத்தில் உயிர் வாழும் ஒருவனிடம், கல்லுக்குள் ஈரத்தைக் காண்கிறாள் ஒருத்தி. ரத்தத் தோடு கலந்த புரட்சிக் கொள்கை; இதயத்தோடு இணைந்த மென்மையான காதல்.
புரட்சியாளர்களின் கடுமையான அணுகுமுறைகளை, அரசு இயந்திரத்தின் வலுவான அடக்குமுறைகளைத் தாண்டி, இக்காதல் என்பது எதுவரை செல்கிறது?
Be the first to rate this book.