ஓகி புயல் குமரி மண்ணைச் சிதைத்தபோது, ஒரு சிறிய தேவாலயமும் இடிந்து விழுந்தது. ஆனால் இடிந்தது வெறும் கற்களும் சுவர்களுமல்ல ஒரு மனிதனின் நம்பிக்கையும் சோதனைக்குள்ளானது.
வாரத்தில் ஆறு நாட்கள் பூமியின் ஆழத்தைத் தோண்டி தனது வாழ்வாதாரத்திற்காகவும், ஞாயிறு அன்று போதகராகவும் வாழும், படிப்பறிவற்ற கிணறுதோண்டி ராஜன், தன் கைகளால் மீண்டும் அந்தச் சிறுதேவாலயத்தை எழுப்பத் துணிகிறான். ஆனால் அவன் எதிர்கொண்டது மண்ணையோ பாறைகளையோ அல்ல - மதவெறி, அதிகாரம், அரசியல், அவதூறு, துரோகம் என மனித மனங்களின் இருளை. அவற்றையெல்லாம் மீறி, ஒரு சாதாரண மனிதனின் அசைக்க முடியாத விசுவாசம் எவ்வாறு வரலாறாக மாறுகிறது என்பதே இந்நாவலின் உயிர்த்துடிப்பு.
யோபுவின் பொறுமையையும், கெத்சமனேயின் கண்ணீரையும் நினைவூட்டும் ராஜனின் வாழ்க்கை, உலகின் மறுமுனையில் நிகழும் அரசியல் மாற்றங்கள் கூட, குமரியிலுள்ள மலைகளில் ஒன்றின் உச்சியில் முழங்காலிட்டு அழும் ஒரு மனிதனின் ஜெபத்திற்கு எவ்வாறு பதிலாகின்றன என்பதை உருக்கமாகச் சொல்கிறது. மண் தோண்டிய ஒரு மனிதன், இறுதியில் மனித இதயங்களையே தோண்டி விழிப்பூட்டிய கதையே 'ஒரு கிணறுதோண்டியின் கெத்சமனே'.
Be the first to rate this book.